Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா மேனனிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. கடுப்பாகி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த பதிலடி

ishwarya-menon-latest-interview update

தமிழ் சின்னத்திரை சீரியலில் இருந்து வெள்ளி திரையில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். இவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு போன்ற மொழில் உள்ள படங்களிலும் நடித்திருந்தார். மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த ஐஸ்வர்யா மேனன் நடிகர் மிர்ச்சி சிவா உடன் இணைந்து ‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து ‘நான் சிரித்தால்’ என்ற படத்தில் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருப்பார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான “வேழம்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்திருக்கிறார். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஐஸ்வர்யா மேனன் இடம் பல கேள்விகளை கேட்டிருந்தார் அனைத்திற்கும் சுவாரசியமான பதில்களை அளித்து வந்த ஐஸ்வர்யா மேனன் அந்த தொகுப்பாளர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் மிகவும் கடுப்பானார்.

அதாவது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஐஸ்வர்யா மேனனிடம் நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளீர்களா என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு மிகவும் கடுப்பான ஐஸ்வர்யா மேனன் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒருவரின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். பத்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் என்னை சீரியலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கிறது. இதுதான் காரணமே தவிர நான் அறுவை சிகிச்சை எதுவும் செய்து கொள்ளவில்லை என்று சூடான பதிலை கொடுத்துள்ளார்’. இவரின் இந்த தகவல் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

ishwarya-menon-latest-interview update
ishwarya-menon-latest-interview update