மலையாள சினிமாவில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஐயப்பனும் கோஷியும்.
பிஜு மேனன் மற்றும் பிரிதிவிராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றியுள்ளார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் இயக்குனர் சசிகுமார் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இன்னொரு நடிகர் யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.
சரத்குமார், ஆர்யா என பல நடிகர்களின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்புவும் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிம்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.