தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அங்கேயே ஆடம்பர பங்களாவில் குடியேறி இருக்கிறார். தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ராவுக்கு மும்பையில் சொத்துகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக விற்க முடிவு செய்துள்ளார். சினிமாவில் அறிமுகமான போது மும்பையில் வாங்கிய தனது பழைய வீட்டை விற்கவும் விலை பேசினார். இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் அந்த வீட்டை ராசியான வீடாக கருதி தனக்கு விற்குமாறு கேட்டுக்கொண்டார்.
வீட்டுக்கு ரூ.7 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த தொகையை கொடுத்து பிரியங்கா சோப்ரா வீட்டை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் வாங்கி இருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் ஜாக்குலின் குடியேறுகிறார்.