கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்ல, முகம் தெரியாத நைஜீரிய சிறுவர்களையும் கூட கவர்ந்துள்ளது. நைஜீரிய சிறுவர்கள் இணைந்து ஜகமே தந்திரம் டிரைலரை தங்கள் பாணியில் உருவாக்கி நடித்துள்ளனர்.
ஒரிஜினலில் வரும் காட்சிகள் போலவே தங்களது கெட்டப்பை மாற்றிக்கொண்டு, தமிழில் வசனங்களை பேசி நடித்துள்ள இவர்கள், ஜகமே தந்திரம் என்கிற டைட்டிலையும் தமிழிலேயே எழுதி இணைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Wat a talent @IkoroduB சூப்பர் சூப்பர்டா..தம்பிகளா 👏👏👏#JagameThandhiram @dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh @StudiosYNot @sash041075 pic.twitter.com/Oyuqz2fFEJ
— Soundara Raja Actor (@soundar4uall) June 7, 2021