Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

jagame thanthiram gets ready for release

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.