செந்தில் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடியை செமயா ரீமேக் செய்துள்ளனர் குட்டீஸ் இருவர்.
தமிழ் சினிமாவில் இருபெரும் காமெடி ஜாம்பவான்களாக வேடம் போட்டவர்கள் செந்தில் கவுண்டமணி. இவர்களது கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெறும் வாழைப்பழ காமெடி எவ்வளவு காலம் ஆனாலும் சலிக்கவே சலிக்காது எனக் கூறலாம்.
தற்போது இந்த காமெடி காட்சியை ஜெய் ஆகாஷ் மற்றும் கவின் என்ற இரண்டு சிறுவர்கள் ரீமேக் செய்து நடித்துள்ள செம அழகான வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.