ஜெய் நடிப்பில் தற்போது தயாராகியிருக்கும் படம் தான் “எண்ணித்துணிக” . இப்படத்தை இயக்குனர் வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக அத்துல்யா நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வம்சி கிருஷ்ணா, அஞ்சலி நாயர், ‘சீதக்காதி’ பட புகழ் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரவூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.