ஜெயில் படத்தை வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டு வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்றுதான் ஜெயில். வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடித்துள்ளார். இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன் ஸ்ரீதரன் தயாரித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக காத்திருந்த நிலையில் இந்த படத்தை வெளியிடக் கூடாது இதன் வெளியீட்டு உரிமை எங்களிடம் இருக்கிறது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். படத்தில் நான்தான் வெளியிடுவேன் நான்தான் வினியோகஸ்தர் என்ற பெயரில் கிரிக்ஸ் சினி கிரியேஷன் சார்பாக ஸ்ரீதரன் அவர்களும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயில் படத்தை வெளியிட எந்தவித தடையும் இல்லை. இந்த படத்தின் படத்தின் தயாரிப்பாளர் கிரிக்ஸ் சினி கிரியேஷன் ஸ்ரீதரன் அவர்களே வெளியிடலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஜெயில் திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.