தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றி வெற்றி அடைந்துள்ள இந்த திரைப்படம் நாளுக்கு நாள் வசூல் மாஸ் காட்டி வருகிறது.
படம் வெளியான நாள் முதல் தற்போது வரை 602 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளருக்கு லாபம் மட்டுமே 250 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாகவே தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கி பாராட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.