தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.
மூன்று நாளில் இந்த படம் 250 கோடி வசூலை பெற்றிருந்த நிலையில் தற்போது நான்கு நாளில் 310 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக வெளியான வாரிசு திரைப்படம் ரூபாய் 290 கோடி வசூலையும் துணிவு திரைப்படம் ரூபாய் 210 கோடி வசூலையும் பெற்று வந்த நிலையில் அவை இரண்டையும் முறியடித்து ஜெயிலர் திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.
இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.