Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Jailer gets OTT release date

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கார் மற்றும் காசோலையை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.