Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம். வாங்க பார்க்கலாம்

jailer-movie-characters-new-update

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார்.

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வசந்த் ரவி – ரம்யா கிருஷ்ணன் இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

jailer-movie-characters-new-update
jailer-movie-characters-new-update