தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் நான் ஒரு கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் கதாபாத்திரமாக இருந்தாலும் இந்த படத்தின் மூலம் வசந்த் ரவிக்கு நல்ல மதிப்பு உருவாகியுள்ளது.
இப்படியான நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் வசந்த் ரவிக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய்யை நடிக்க வைக்கத்தான் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
சில காரணங்களால் ஜெய்யால் நடிக்க முடியாமல் போக அதன் பின்னரே வசந்த் ரவிக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருவேளை ரஜினியின் மகனாக ஜெய் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
