ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இப்படத்தை ரசிகர்களுடன் திரை பிரபலங்கள் பலரும் கண்டு களித்து படத்தை பாராட்டி வருகின்றனர். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூல் வேட்டையாடி வரும் இப்படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் குடும்பத்துடன் ரசிகர்கள் கொண்டாடி ரசித்து பார்த்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு காவாலா பாடல் வைப் குறையவே இல்லை. அந்த வகையில் திரையரங்கில் ஜெயிலர் படத்தை பார்த்துக் கொண்டிருந்த வயதான ஒருவர் காவாலா பாடல் ஒலிக்கும்போது சீட்டிலிருந்து வெளியே வந்து நடனமாடியுள்ளார். அதன் வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
🤣🤣💥💥.. Yaenguthu keranguthu mayanguthu therikuthu.. 🤣💥#Jailer #Kaavaalaapic.twitter.com/Jk1oool73B
— VCD (@VCDtweets) August 13, 2023