தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார், சுனில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா உள்ளிட்ட பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இணைந்திருக்கும் பிரபல தெலுங்கு நடிகரான சுனில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
அதாவது நடிகர் சுனில் சுனில் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த படக்குழு அவரது பழைய போஸ்டரையே ரீஎடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அதனை கண்ட ரசிகர்கள் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கலாம் என கூறி விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களுக்கான அப்டேட்டையும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Team #Jailer wishes the versatile actor #Sunil a very Happy Birthday! #HBDSunil #HappyBirthdaySunil pic.twitter.com/71QluUHKeA
— Sun Pictures (@sunpictures) February 28, 2023