Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இன்று தொடங்கியது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

jailer movie latest update

கடந்த ஆண்டு தீபாவளிக்கு விருந்தாக வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்த தயாராகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை பீஸ்ட், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருந்த நிலையில், இப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்பதும் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது. மேலும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தமன்னா, பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.

இந்நிலையில் ஜெயிலர் படம் தொடர்பாக இன்று காலை, 11 மணியளவில் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கப்பட உள்ளதாக தகவல் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு சிறப்பு போஸ்டர் மூலம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.