இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி ஜெய்லர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் அதில் ரஜினி தனக்கான டப்பிங் பணியை முழு வீச்சில் செய்து இன்னும் சில தினங்களில் நிறைவடைய செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
![Jailer movie latest update](https://b3585245.smushcdn.com/3585245/wp-content/uploads/2023/05/rajinikanth_jailer_0.webp?lossy=2&strip=1&webp=1)
Jailer movie latest update