தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். யாரும் எதிர்பாராத அளவில் பொழிந்த வசூல் மழையால் தயாரிப்பாளர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு காசோலை மற்றும் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார்.
அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலிப் குமாருக்கு அடுத்த படத்தையும் கொடுத்து போர்ச்சி காரை பரிசாக வழங்கினார். இயக்குனருக்கும் ஹீரோவுக்கு மட்டும் கார் பரிசாக கொடுத்தீங்க படத்தின் வெற்றிக்கு அனிருத் முக்கிய காரணம் என கருத்துக்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஒரு போர்ச்சி கார் பரிசாக வழங்கப்பட்டது.
பல்வேறு வசதிகளை கொண்டுள்ள இந்த கார் ஒரு ஜெர்மன் நிறுவனத்தை சார்ந்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே 1.44 கோடி என தெரியவந்துள்ளது. இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.

jailer movie nelson-and-anirudh-gifted-car-price