Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் பட லுக்கில் கெத்தாக இருக்கும் ரஜினிகாந்த்.வைரலாகும் பதிவு

jailer-movie-new-poster viral

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் “ஜெய்லர்”. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தில் மாசான லுக்கில் இருக்கும் ரஜினியின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. அது தற்போது இணையதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.