தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தீவிரமாக உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார், தமன்னா, மோகன்லால் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தற்போதைய நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூர் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் இரண்டு நாள் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் நடிகர் சிவராஜ்குமார் இணைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
#JAILER Shooting On Progress🔥
• Shooting Currently At Mangalore💥
• #ShivaRajKumar Part Of Shoot😎
• Shoot Planned Only For 2 Days🤙🏾#Rajinikanth | #Anirudh | #Nelson— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 29, 2023