தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மாசான லுக்கில் இருக்கும் ரஜினியை ரசித்துக்கொண்டு ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.