தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி விருந்தாக சன் டிவியில் இத்திரைப்படம் ஒளிபரப்பானது.
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பான இந்த திரைப்படம் 15.59 ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஜெயிலர் படம் இவ்வளவு ரேட்டிங் பெற்று இருப்பது மிகப்பெரிய விஷயமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
