இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜப்பான்’ திரைப்படம் 11-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Avana ah pudika mudiyuma? Japan range-ae vera!🔥#Japan coming to Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada on 11th Dec!#JapanOnNetflix pic.twitter.com/QhRaCzq3RH
— Netflix India South (@Netflix_INSouth) December 6, 2023