தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் introduction வீடியோவை படக்குழு வெளியிட்டு படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிலவரம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜப்பான் படத்தின் படக்குழு இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இன்னும் 25 நாள் படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

japan-movie-shooting-schedule-update