Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜப்பான் படத்தின் “டச்சிங் டச்சிங்” பாடல் வீடியோ வைரல்

japan-movie song update

“இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘

ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ‘டச்சிங் டச்சிங்’ (Touching Touching) பாடல் வெளியாகியுள்ளது. கார்த்தி மற்றும் இந்திராவதி சவுகான் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.”,