Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் புதிய படம் குறித்து வெளியான தகவல், மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் படம் ட்ராப்பாகி விட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜேசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து படம் கைவிடப்படவில்லை என்பதை உறுதி செய்வது தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் தற்போது படத்தின் கதை வேலைகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாகவும் ஹீரோ, ஹீரோயினியையும் தேர்வு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இது குறித்த ஆதாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் சூட்டிங் செல்ல படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jason Sanjay new movie shooting update
Jason Sanjay new movie shooting update