பாலிவுட் திரை உலகின் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் ஷாருக்கான். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.