தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் கதாநாயகிகளாக நடித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டிருப்பதாகவும், ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதியின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
#JAWAN : Final SHOOT On Progress⭐
• Currently Last Schedule On SHOOT.
• #ShahRukhKhan & #VijaySethupathi Involved in The Fight Sequence🔥
• 12 Cameras Are Being Used During Shoot For The Fight Sequence.
• #Nayanthara Also Part Of Shoot❤️— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 6, 2023