மணிரத்தினம் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வரும் நிலையில் இப்படத்தில் அருண்மொழி வருமானாக நடித்த அசத்தியிருந்த நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வந்தியத்தேவனாக நடித்திருந்த நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது நடிகர் கார்த்தியின் நடிப்பில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சர்தார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் கார்த்திக்கு “செம்ம மச்சான்… ஆல் த பெஸ்ட்” என்று நடிகர் ஜெயம் ரவி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்தப் பதிவு தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Semma machi💥🔥 all the best! https://t.co/Rzo4jmeRLK
— Arunmozhi Varman (@actor_jayamravi) October 14, 2022