Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தில் நடிக்க ஜெயசுதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாக பரவும் தகவல்

jayasudha-in-salary-for-varisu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடம்பள்ளி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு.

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த படத்தில் நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்க எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். குறிப்பாக தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா நடித்திருந்தார்.

எண்ணற்ற படங்களில் நடித்துள்ள இவர் இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

jayasudha-in-salary-for-varisu
jayasudha-in-salary-for-varisu