Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வந்த வேகத்தில் சீரியலில் இருந்து விலகும் எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணி.காரணம் என்ன தெரியுமா?

jhansi-rani-left-new-serial update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் காயத்ரி கிருஷ்ணன்.

ஜீ 5 தளத்தில் வெளியான அயலி வெப் சீரிஸ் தொடர் மூலமாக பிரபலமடைந்த இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலிலும் ஒரு மாஸான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் என்ற சீரியலிலும் கமிட் ஆகியுள்ளார். ஆனால் கால் ஷீட் பிரச்சனை காரணமாக நம்பர் 1 சீரியலான எதிர் நீச்சல் தொடரில் இருந்து வெளியேற முடியாது என முடிவெடுத்து கிழக்கு வாசல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

அதே போல் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக மிரட்டி வரும் மாரி முத்துவும் கிழக்கு வாசல் சீரியல் வாய்ப்பை நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

jhansi-rani-left-new-serial update

jhansi-rani-left-new-serial update