ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.60 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக தகவல் வெளியானது. இப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 8-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Roll-camera-action!🎥 Indha Pandyaa Blockbuster paaka ellarum vaanga! 💥
Jigarthanda DoubleX is coming to Netflix on 8 December in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi!
Coming soon in English.#JigarthandaDoubleXOnNetflix pic.twitter.com/r1OlgnTpLY— Netflix India South (@Netflix_INSouth) December 1, 2023