Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எனது ஆசிரியர் அஜித்தான்.. ஜான் கொக்கன் நெகிழ்ச்சி பதிவு

John Kokken about Ajithkumar

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஜான் கொக்கன். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’, ‘கே.ஜி.எப்’ போன்ற படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித்தின் ‘சார்ப்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் வேம்புலியாக நடித்து அசத்தினார்.

பின்னர், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவந்தார். அஜித் தன் ஆசிரியர் என்று கூறிவரும் ஜான் கொக்கன் அடிக்கடி அவரை பற்றி நேர்காணல்களில் பேசி வருகிறார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அஜித்தை குறிப்பிட்டு ஜான் கொக்கன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு ஆசியர்களை கொடுத்துள்ளார். நம் வாழ்வில் உயரவும், நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனக்கு அதுபோல அஜித்குமார்.

அவர் எனக்கு மட்டுமின்றி கோடிக்கணக்கானோருக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. என் வாழ்வில் வந்ததற்கும், நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்ய என்னை ஊக்குவித்ததற்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.