குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு குடிக்க வேண்டிய ஜூஸ்கள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஸ்ட்ரீட் ஃபுட் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அது உடலுக்கு சில தீங்கை விளைவிக்கிறது. அப்படி உடலுக்கு தீங்கை விளைவிக்காமல் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சில ஜூஸ்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொடுக்க வேண்டிய ஜூஸ் ஆரஞ்சு. இதில் இருக்கும் வைட்டமின்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் பீட்ரூட் ஜூஸ் மற்றும் கேரட் ஜூஸ் மிகவும் நல்லது. குறிப்பாக ஸ்ட்ராபெரி, கிவி ஜூஸ்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
எனவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த ஜூஸ்களை கொடுப்பது நல்லது.