சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்க குடிக்க வேண்டிய ஜூஸ்கள் குறித்து பார்க்கலாம்.
உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று சிறுநீரகம். இதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் அதிகம் வருகிறது. அப்படி வரும் கற்களை சில வகையான ஜுஸ்கள் குடித்து சரி செய்யலாம். அதனைக் குறித்து நாம் இந்த பதிவு தெரிந்து கொள்வோம்.
சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் கோதுமைப்புல் மிகவும் பயன்படுகிறது. இது மட்டும் இல்லாமல் செலரி சாறு சிறுநீரக கற்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் மாதுளம் மற்றும் துளசி சாறு குடிப்பது நல்லது. குறிப்பாக எலுமிச்சை சாறு குடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இதில் இருக்கும் சிட்ரஸ் கற்களை எளிதில் உடைக்க உதவுகிறது.
எனவே சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை எளிமையாக கரைத்து உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வோம்.