Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலியின் முதல் பதிவு.

Julie Post After Bigg Boss Ultimate

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டவர். ஒட்டுமொத்தமாக மக்களால் வெறுக்கப்படும் நபராகவே இருந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக பங்கேற்று மக்களின் மனதில் இருந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி உள்ளார் என கூறலாம். அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் ஜூலியன் மீதான எண்ணம் மாற்றியுள்ளது.

நன்றாக விளையாடி வந்த ஜூலி சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடு இரவில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் கடைசியில் என்ன பெறுகிறோம் என்பது வெற்றியல்ல எவ்வளவு தூரம் இந்த பயணத்தில் பயணிக்கிறோம் என்பதுதான் வெற்றி என தனக்கு கிடைத்த ஆதரவு பற்றி மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் போட்டியில் ஜெயிக்கவில்லை என்றாலும் மக்களின் மனதை நீங்கள் வென்று விட்டீர்கள் என கூறி வருகின்றனர்.