கொரோனா காரணமாக தற்போது திரைப்படங்கள் அனைத்தும் OTT தளங்களில் வெளியாகி வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் க.பெ.ரணசிங்கம்.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இப்படம் Zeeplex-ல் வெளியானது, இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியிருந்தார்.
மேலும் இப்படம் சிறந்த விமர்சனங்களையும் குடும்பங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது, இதுவரை இல்லாத அளவு OTT-யில் வெளியான திரைப்படங்களில் இப்படமே அதிக வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தை 4,70,000 பேர் புக் செய்துள்ளதாகவும் 9.20 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி Zeeplex-ல் அடுத்து வெளியாகவுள்ள Khaali Peeli என்ற ஹிந்தி திரைப்படத்தை 20,000 பேர் வரை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.