OTT-ஐ தொடர்ந்து க/பெ ரணசிங்கம் படம்திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம்.
பெ விருமாண்டி என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இந்த படம் அக்டோபர் இரண்டாம் தேதி OTT வையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடம் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது அக்டோபர் 16ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
திரையரங்குகளிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“In theatres near you”, How long did we wait to say this! This is an emotional moment to all of us as we are back after a long break to give you the theatrical experience. Watch #KaPaeRanasingam in cinemas from OCT 16!🔥💪#RanasingamInTheatres @VijaySethuOffl @aishu_dil pic.twitter.com/5Yt6fqrQkK
— KJR Studios (@kjr_studios) October 9, 2020