மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்தாக வெளியாகவுள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு அவர் வில்லனாக நடித்துள்ளார்.
ஹீரோவாக அவர் பல படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் முக்கிய வேடங்களில் அவர் நடிக்க தொடங்கிவிட்டார்.
அடுத்தாக அவரின் முழுமையான நடிப்பில் உருவாகியிருக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி இப்படத்தில் நடித்திருக்கிறாராம்.
இதற்கு ஜிவி.பிரகாஷின் மனைவி பாடகி சைந்தவி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Here is the official teaser of my SIL @BhavaniSre’s debut movie #KaPaeRanasingam. Super proud of you sweetie. Best wishes to you and you are gonna rock it. May all your wishes and dreams come true.https://t.co/1W5KHoDfmF
— Saindhavi (@singersaindhavi) May 23, 2020