இந்த சமூகத்தில் தற்போதைய சூழலில் என்னென்னவோ பிரச்சனைகள் நடைபெறுகின்றன. அதில் குடும்ப உறவுகளுக்குள்ளே எத்தனை எத்தனையோ பிரச்சனைகள்,அதை விட கணவன்,மனைவி இடையே உறவு விரிசல் பல காரணங்களால்.இதையும் தாண்டி சில கொடூர சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் இதன் பின்னணியை கொண்டு காளிதாஸ் அதிரடியாக களமிறங்கியுள்ளது. சரி படத்திற்குள் போகலாமா?
நடிகர் பரத் இப்படத்தின் ஹீரோவாக ஒரு போலிஸ் அதிகாரியாக வருகிறார். காளிதாஸ் கேரக்டரான அவருக்கு மனைவியாக அன் ஷீ ட்டெல். இருவரும் இடையே முகம் சுளிப்பு. குறிப்பாக அவரின் மனைவி வித்யாவுக்கு. காரணம் கணவர் தன்னை கண்டுகொள்ளாமல் வேலை வேலை என பிசியாக இருக்கிறார் என்பதே.
இதற்கிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள். இறந்த மூவருமே பெண்கள். ஒரே மாதிரியான சம்பவங்கள்.கொலையா தற்கொலையா என பல கேள்விகள்.
இதனால் பரத் மற்றும் போலிஸ் குழு மிகவும் தீவிரமாக இந்த சம்பவத்தில் விசாரணையை தொடங்குகிறது. இது ஒருபக்கம் இருக்க போலிசாருக்கு கிடைக்கும் துப்புகளால் அதிர்ந்து போகிறார்கள். மறுபக்கம் பரத்தின் மனைவிக்கு மனநலபிரச்சனை. அவருக்குஅப்படி என்ன பிரச்சனை?
நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதே இந்த காளிதாஸ்.
ஹீரோ பரத் பாய்ஸ் படம் முதல் பல படங்கள் மூலம் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவருக்கு இந்த காளிதாஸ் ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். சொன்னது போல ஒரு போலிஸ் அதிகாரியாக அப்படியே மாறியுள்ளார்.
மலையாள படங்களில் நடித்து வந்த ஹீரோயின் அன் ஷீட்டல் புதிதாக திருமணமான மனைவி என்ன எதிர்பார்ப்பார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் போலிஸ்காரரின் மனைவி சகமனைவிகள் போல சகஜமாக கணவருடன் வாழ்க்கையை எஞ்சாய் செய்யமுடியவில்லை என வருத்தத்தை முகத்தில்காட்டுகிறார்.
சீனியர் போலிஸ் அதிகாரியாக இந்த தற்கொலை சம்பவத்தை கையில் எடுக்கிறார் நடிகரும் இயக்குனருமான சுரேஷ் மேனன். அனுபவத்தை திறமையில் காட்டுவதோடு முந்தய தலைமுறை கணக்கில் எப்படி என எடுத்து வைக்கும் வசனங்கள் பளிச்சிட வைக்கிறது.
இயக்குனர் ஸ்ரீ செந்தில் படத்தில் வழக்கமான படங்கள் போல மசாலா பூசாமல் காளிதாஸை முழுமையாக காட்டுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார். கதை போகும்போக்கு கூடுதல் சுவாரசியம்.
ஆங்காங்கே சின்ன இரட்டை அர்த்த வசனங்களுக்கு இளைஞர்களிடம் கிளாப்ஸ் மற்றும் சிரிப்பு சத்தம் எழுகிறது.
கதையை இயக்குனர் சுவாரசியமாக கொண்டுசென்ற விதம்.
கிளைமாக்ஸ் திரில்லர் சற்றும் எதிர்பாராதது.
விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் மனதை ஈர்க்கும் ரகம்.
சம்பவங்களும்,கடைசியில் நடக்கும் நிகழ்வுகளும் பல கேள்விகளை எழுப்புவது.
மொத்தத்தில் காளிதாஸ் ரியலான கிரைம் திரில்லர். வித்தியாசமான படமாக பார்த்த ஒரு மன திருப்தி.