Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்ளை கடந்த காவலா.!! வீடியோ வெளியிட்ட படக்குழு

kaavaalaa song super hit latest update viral

இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். பயங்கரமான ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியான ‘காவாலா’ பாடல் தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்து தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.