இன்று உலகை ஆட்டிப்படைக்கும் கொடிய வைரஸிற்காக பல உலக நாடுகள் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு உள்ளது.
இதற்கிடையே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீரை பரிந்துரை செய்யத் தொடங்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.
குறிப்பாக இது கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
அந்தவகையில் இந்த கபசுர குடிநீர் குடிப்பதனால் கொரோனா போன்ற வைரஸ்களிடமிருந்து நாம் பாதுகாக்கலாமா? என்று இங்கு பார்ப்போம்.
கபசுர குடிநீர் எப்படி தயாரிக்கப்படுகின்றது?
சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
பக்கவிளைவுகள் உள்ளதா?
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீர் உருவாக்கப்படுவதால் இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.
நன்மை என்ன?
இது கொரோனாவால் பாதிப்படையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, கொரோனாவிற்கு எதிராக போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா?
கபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என, எந்த சித்த மருத்துவரும் ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும் கூட, அதனை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் என்று கூறப்படுகின்றது.