லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் சென்ற வருடம் தீபாவளி அன்று வெளிவந்து மிக பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் கைதி.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே இருந்து சிறந்த வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் இறுதியில் இப்படத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் பிரபு, லோகேஷ் கனகராஜிடம் கைதி 2 படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க கூறிவிட்டாராம்.
மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது கைதி 2 படத்திற்கான script ஒர்க் துவங்கிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.