Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏழை மாணவியின் கல்விச் செலவுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய காஜல் அகர்வால்

Kajal Agarwal donates Rs 1 lakh for poor students education

தமிழில் இந்தியன்-2, தெலுங்கில் ஆச்சார்யா போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில், டுவிட்டரில் கல்வி உதவி கேட்ட மாணவி ஒருவருக்கு, அவர் பண உதவி செய்துள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தான் கல்லூரி தேர்வுக்கு ரூ. 83 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் வேலையை இழந்ததால், தன்னால் அந்தத் தொகையை செலுத்த முடியவில்லை. அதனால் தனக்கு உதவி செய்யுமாறு காஜல் அகர்வாலிடம் கேட்டிருந்தார்.

இதையடுத்து நடிகை காஜல் அகர்வால், தனது உதவியாளர் மூலமாக சம்பந்தப்பட்ட மாணவியை தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டறிந்து, தன்னிடம் ரூ.83 ஆயிரம் கேட்ட மாணவியின் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் செலுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏழை மாணவிக்கு உதவிய நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.