தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். பிரசவத்திற்கு பிறகு மீண்டும் படங்களை நடித்து வரும் காஜல் தற்போது நிரந்தரமாக சினிமாவை விட்டு விலகப் போவதாக தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தது.
படங்களில் பிசியாக இருப்பதால் குழந்தையுடன் நேரத்தை செலவிட முடியாத காரணத்தினால் அவர் சினிமாவில் இருந்து விலகப் போவதாக சொல்லப்பட்டிருந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதில் அவர், “சினிமாவில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன் என்றும் ரசிகர்கள் மீது தனக்கு இருக்கும் அதிக அன்பை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தனது தொழிலும், குடும்ப வாழ்க்கையும் தனித்தனியாகவே இருக்கிறது அது எப்போதும் தொடரும்” எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பேட்டியால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.