நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து கலக்கி வருபவர்.
வயதாகியும் திருமணம் ஆகாத நடிகைகள் லிஸ்டில் இருந்த அவர் இப்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளார்.
வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற உள்ளது.
கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை தான் காஜல் திருமணம் செய்ய உள்ளார். இந்த நிலையில் முதன்முதலாக தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் காஜல் தனது கையில் நிச்சயதார்த்த மோதிரத்தையும் அணிந்துள்ளார்.