Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியலில் நடிக்கும் கலாபக் காதலன் பட நடிகை.. எந்த சீரியல் தெரியுமா?

kalaba-kadhalan-kanmani-in-zee-tamil-serial

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் சந்தியா ராகம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஜானகி மற்றும் சந்தியா என இரண்டு சகோதரிகளின் பாச கதையாக இந்த சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அக்ஷயா. இவர் ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரை சின்னத்திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அது கலாபக் காதலன் கண்மணி தான் எனக்கு ரசிகர்கள் அடேங்கப்பா அந்த நடிகையா இது என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

kalaba-kadhalan-kanmani-in-zee-tamil-serial
kalaba-kadhalan-kanmani-in-zee-tamil-serial