Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வைரல்

kalyani-priyadarshan-latest-photoshoot

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல சூப்பரான படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ‘புத்தம் புது காலை’ என்கின்ற படத்திலும் நடித்திருந்தார்.

ஆனால் கல்யாணி அதிக அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தான். இப்படம் சிம்புக்கு மட்டுமின்றி நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கல்யாணி தற்போது லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.