இந்திய திரை உலகில் ரசிகர்களின் மனதில் உலகநாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கண்ட கமல்ஹாசன் இப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இதையடுத்து நான்கு படங்களை தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார். மேலும் விஜய் டிவியில் மீண்டும் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6ல் தொகுப்பாளராகவும் கலந்து கொள்ள தயாராகியும் வருகிறார். இப்படி வெள்ளி திரையிலும், சின்ன திரையிலும் பிசியாக இருந்து வரும் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படவிழாவின் போது தன்னுடைய மகள் அக்ஷராஹாசனுடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அக்ஷரா ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது வைரலாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அப்புகைப்படத்தில் அப்பாவும் மகளும் செம்மையான காஸ்ட்யூம்மில் சூப்பராக போஸ் கொடுத்துள்ளனர். இந்த அருமையான புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது.
View this post on Instagram