Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தேவர் மகன் படத்தை பெருமைப்படுத்திய கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்

kamal-hassan devar-magan-movie remake-photo

இந்திய திரை உலகில் உலகநாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 1992 அக்டோபர் 25ஆம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் வெளியானது. அப்படம் தற்போது 30 ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது.

அந்நினைவை பெருமைப்படுத்தும்படி, நடிகர் கமல்ஹாசன் தனது இளைய மகள் அக்ஷரா ஹாசன் உடன் தேவர் மகன் திரைப்படத்தின் ஒரு புகைப்படத்தை ரீமேக் செய்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.